பெய்ஜிங்: சீனாவில் இப்போது இளம் பெண்கள் பலரும் 24*7 தங்கள் காதலுடன் சாட் செய்து கொண்டே இருக்கிறார்களாம். ஆனால், இதில் ஒரு பெரிய பிரச்சினை இருப்பதாக வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருப்பது சீனா.. ஆனால், அதே தொழில்நுட்பம் இப்போது அந்த நாட்டிற்கே பெரிய அபாயத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.
சீனா: அதாவது சீனாவில் இளம் பெண்கள் தங்கள் காதல் அன்பாக இருப்பதாகவும் தங்களுடன் மணிக்கணக்கில் பேசவும் செய்கிறார்களாம். ஆனால், இதில் ஒரே பிரச்சினை என்னவென்றால் அவர்கள் ரியல் காதலன் இல்லை. ஏஐ காதலன். ஆம் இப்போது சீனாவில் பெண்களுக்கு ஏஐ காதலன் வந்துவிட்டார்கள். இதற்காக அங்கே "க்ளோ" என்ற செயலி இருக்கிறது. இப்போது அந்த செயலி தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான மினிமேக்ஸ் என்ற நிறுவனம் இந்த ஏஐ மாடலை உருவாக்கியுள்ளது இந்த செயலி பெண்களிடம் காதலன் போலப் பேசுமாம். பெண்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதைத் தெரிந்து ஆண்களைக் காட்டிலும் இந்த செயலி சிறப்பாகப் பேசுவதாகவும் அந்நாட்டுப் பெண்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.