Oct 19, 2025
Thisaigal NewsYouTube
"சர்வ நாசம்.!" காசா மீது படையெடுப்பு எப்போது? இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சொன்ன அந்த ஒரு விஷயம்
உலகச் செய்திகள்

"சர்வ நாசம்.!" காசா மீது படையெடுப்பு எப்போது? இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சொன்ன அந்த ஒரு விஷயம்

Share:

டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் போர் 21ஆவது நாளாகத் தொடரும் நிலையில், முழு வீச்சில் படையெடுப்பை ஆரம்பிப்பது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் 21ஆவது நாளாகத் தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் படை முதலில் கடந்த அக்.7ஆம் தேதி காசாவுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்திய நிலையில், அதற்குப் பதிலடி தரும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.

இப்படி இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் இஸ்ரேல் ஹமாஸ் மோதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்: ஹமாஸை தவிர வேறு எந்த எதிரியுடனும் போரில் ஈடுபட இஸ்ரேலுக்கு விருப்பமில்லை என்று தெரிவித்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட், சரியான சூழல் அமையும் போது காசாவில் முழு வீச்சில் படையெடுப்பு தொடங்கும் என்று நடவடிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "ஹமாஸுக்கு எதிராக தெற்கே நாங்கள் சண்டையிட்டு வருகிறோம். வடக்கில் எந்தவொரு மோதலுக்கும் தயாராக இல்லை.. அதேநேரம் வடக்கில் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா நடத்தும் தாக்குதலுக்கு நாங்கள் பதிலடி தருகிறோம். இதில் ஹிஸ்புல்லாவுக்கு தான் பல இழப்புகள்.. நாங்கள் போரை விரிவுபடுத்துவதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை" என்றார்.

Related News