Jun 17, 2026
Thisaigal NewsYouTube
எலோன் மஸ்க் உலகிலேயே பெரும் பணக்காரர்
உலகச் செய்திகள்

எலோன் மஸ்க் உலகிலேயே பெரும் பணக்காரர்

Share:

மோஸ்கோவ், ஏப்ரல்.02-

அமெரிக்க தொழில்நுட்ப தொழிலதிபரும் கோடீஸ்வரருமான எலோன் மஸ்க், 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அண்மையில் வெளியிடப்பட்ட ஃபோர்ப்ஸின் வருடாந்திர பட்டியலை மேற்கோள் காட்டி, ஸ்புட்னிக்/ஆர்ஐஏ நோவோஸ்டி அத்தகவலை வெளியிட்டுள்ளது. மஸ்கின் நிகர மதிப்பு US$342 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவர் 2023 இல் அந்த நிலையை இழக்கும் முன் 2022 இல் முதல் இடத்தைப் பிடித்தார். 2024 இல், மஸ்க் தனது செல்வத்தை 147 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தார். மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தனது சொத்து மதிப்பில் மேலும் 39 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் சேர்த்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது மொத்த மதிப்பு 216 பில்லியன் டாலராகும்.

ஃபோர்ப்ஸ் தரவுகளின்படி, ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான அமேசானின் நிறுவனர், ஜெஃப் பெசோஸ், 215 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். நான்காவது இடத்தை மென்பொருள் நிறுவனமான ஆரக்கிளின் இணை நிறுவனர் லாரி எலிசன் 192 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பெற்றுள்ளார்.
இதற்கிடையில், Moet Hennessy Louis Vuitton (LVMH) குழுமத்தின் தலைவர் அர்னால்ட் மற்றும் அவரது குடும்பம் US$178 பில்லியன் மதிப்பீட்டில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.

உலக கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 247 பேர் அதிகரித்து 3,028 ஆகவும், முதன்முறையாக 3,000ஐ தாண்டியதாகவும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 16.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அது 2024 உடன் ஒப்பிடும்போது 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் கூடுதலாகும். பட்டியலில் உள்ள பில்லியனர்களின் சராசரி சொத்து மதிப்பும் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்து 5.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. அமெரிக்காவில் 902 பில்லியனர்கள் உள்ளனர். அதைத் தொடர்ந்து சீனா (ஹாங்காங் உட்பட) 516, மற்றும் இந்தியா 205 என இருக்கின்றனர். பட்டியலில் உள்ள தனிநபர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மூன்று நாடுகளின் நாட்டினராக உள்ளனர்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை