சீனா, மார்ச் 4 -
சீனாவில் முக்கியமான வருடாந்திர அரசியல் கூட்டம் தொடங்கவிருக்கிறது. இந்த ஆண்டில் சந்திக்கவிருக்கும் சவால்களைச் சமாளிக்கும் திட்டங்களைத் தலைவர்கள் வகுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் உயர் ஆலோசனைக் குழு பொருளியல் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவிருக்கிறது. சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டில் சந்தையின் நம்பகத்தன்மை, வேலையின்மை உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளைச் சமாளிக்கும் வழிமுறைகள் விவாதிக்கப்படும்.
சீனாவில் குறிப்பாகப் பட்டதாரிகளிடையே வேலையின்மை விகிதம் அதிகமாக இருக்கிறது. நாளை 5 மார்ச் சட்டமன்றம் கூடும். தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தத் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.சீனாவின் அரசியல் கூட்டம் ஒரு வாரம் நீடிக்கும்.