Oct 19, 2025
Thisaigal NewsYouTube
ஐஸ் கட்டியால் நிரப்பப்பட்ட பெட்டிக்குள் 3 மணி நேரம் நின்று பெண் கின்னஸ் சாதனை
உலகச் செய்திகள்

ஐஸ் கட்டியால் நிரப்பப்பட்ட பெட்டிக்குள் 3 மணி நேரம் நின்று பெண் கின்னஸ் சாதனை

Share:

போலந்து நாட்டில் உலக சாதனைக்காக 'ஐஸ்' கட்டிகளால் நிரப்பப்பட்ட பெட்டிக்குள் முழு உடலுடன் நிற்கும் போட்டி நடந்தது.

இந்த போட்டியில் போலந்தை சேர்ந்த கட்டர்ஜினா ஜகுபவ்ஸ்கா மிக தைரியமாக பங்கேற்றார்.

அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிந்ததும் அவர் 6 அடி உயரமான கண்ணாடி பெட்டிக்குள் நிறுத்தப்பட்டார்.

அவர் மீது 'ஐஸ்' கட்டிகள் கொட்டப்பட்டது. அதை தொடர்ந்து கவுண்ட்டவுன் தொடங்கியது.

அப்போது அவர் 'ஐஸ்' பெட்டிக்குள் 3 மணி நேரம் 6 நிமிடம் 45 செகண்ட் நின்று கின்னஸ் சாதனை படைத்தார்.

Related News