Jun 13, 2026
Thisaigal NewsYouTube
டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் படுகொலை- மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்!
உலகச் செய்திகள்

டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் படுகொலை- மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்!

Share:

யூட்டா, செப்டம்பர்.12-

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான 31 வயதான சார்லி கிர்க் நேற்று பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வலதுசாரி அரசியல் சிந்தனையாளரும், எழுத்தாளருமாகிய சார்லி கிர்க் அமெரிக்கர்களிடம் தனது தனித்துவமான நிகழ்ச்சிகளின் மூலம் நன்கு அறியப்பட்டவர். டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரான அவர் அமெரிக்காவின் 47-வது அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி மற்றும் டிரம்புக்கு ஆதரவாக முழுமையாகப் பிரசாரம் செய்திருந்தார்.

இந்நிலையில், யூட்டா மாகாண பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, மர்ம நபர் ஒருவர் அவரைச் சுட்டதில் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். சார்லி கிர்க் சுடப்பட்ட காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

Related News

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க் படுகொலை- மர்ம நபரால் சுட்ட... | Thisaigal News