டெல் அவிவ்: இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், காசாவில் இருக்கும் முக்கிய மருத்துவமனையில் இருந்து ஹமாஸ் ஒரு பரபர வீடியோவை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. முதலில் இந்த தாக்குதலை ஆரம்பித்தது ஹமாஸ் என்றாலும் கூட, இஸ்ரேல் ராணுவம் உடனடியாக பதிலடி கொடுத்து தீவிர தாக்குதலை ஆரம்பித்துவிட்டது.
காசா மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல், படையெடுப்பையும் ஆரம்பித்தது. தங்கள் நாட்டை தாக்கிய அனைத்து ஹமாஸ் வீரர்களையும் கொன்றே தீருவேன் என்ற முனைப்பில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
காசா மருத்துவமனைகள்: இப்படிக் காசா மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் மிகப் பெரிய சர்ச்சையாகிறது. ஏனென்றால் பொதுவாக எந்தவொரு போர் என்றாலும் மருத்துவமனைகள் போலப் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்படாது. ஆனால், இஸ்ரேல் தொடர்ச்சியாகக் காசா மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சர்ச்சையானது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.