சிவப்பு பாண்டா, பாம்பு, கிளி உட்பட 87 விலங்குகளைக் கடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 6 இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் தாய்லந்தின் பேங்காக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தில் பிடிபட்டனர்.
சந்தேக நபர்கள் அவற்றைத் தாய்லந்திலிருந்து மும்பைக்குக் கடத்திக் கொண்டுசெல்லத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
"29 உடும்புகள், 21 பாம்புகள், 15 பறவைகள் உட்பட மொத்தம் 87 விலங்குகள் பயணப் பெட்டியில் மறைக்கப்பட்டிருந்தன," என்று தாய்லந்தின் சுங்கத்துறை தெரிவித்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இறக்குமதி வரியைப் போன்று 4 மடங்கு அபராதம் விதிக்கப்படலாம்.