டக்கா, நவம்பர்.17-
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹஸீனாவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு, குற்றவாளி என்று உறுதிச் செய்த அந்நாட்டின் அனைத்துலக குற்றவியல் நடுவர் மன்றம், அவருக்கு மரணத் தண்டனை விதிப்பதாகத் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை வங்கதேசத்தில் நடந்த இளைஞர்கள் போராட்டத்தின் போது, ஷேக் ஹசீனா மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.
அவருக்கு எதிரான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி Golam Mortuza Mozumder, 453 பக்கங்களை உள்ளடக்கிய தீர்ப்பை இன்று வாசித்தார்.
ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், அவர் மீதான வழக்கு அவர் ஆஜராகாத நிலையில் நடத்தப்பட்டது.
தீர்ப்பின் அறிவிப்பு, வங்கதேச தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.








