Dec 16, 2025
Thisaigal NewsYouTube
மெஸ்ஸி நிகழ்ச்சியில் குளறுபடி : மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி விலகல்
உலகச் செய்திகள்

மெஸ்ஸி நிகழ்ச்சியில் குளறுபடி : மேற்கு வங்க விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி விலகல்

Share:

கொல்கட்டா, டிசம்பர்.16

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, மேற்கு வங்க விளையாட்டு துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ், தனது அமைச்சர் பதவியைத் துறந்துள்ளார்.

கடந்த 13ம் தேதி அன்று அர்ஜென்டினா அணியின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, கோட் டூர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு கால்பந்து ரசிகர்கள் பலரும் விலையுயர்ந்த டிக்கெட்டுகளை வாங்கியிருந்த போதிலும் மெஸ்ஸியைப் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். மெஸ்ஸி சுமார் 10 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே மைதானத்தில் இருந்தார்.

நிகழ்ச்சி சரியான முறையில் ஒருங்கிணைக்கப்படாததால் பிரச்சனை ஏற்பட்டது. ரசிகர்கள் தண்ணீர் பாட்டிலை வீசினர். பெரும் குழப்பம் ஏற்பட்டது. மெஸ்ஸி கிளம்பிச் சென்றவுடன் ஆத்திரமடைந்த ரசிகர்கள் பிளாஸ்டிக் நாற்காலிகள், தண்ணீர் பாட்டில்களை வீசி எறிந்து, மைதானத்தின் சொத்துக்களைச் சேதப்படுத்தினர். அதைத் தொடர்ந்து மாநில முதல்வர் மம்தா, மெஸ்ஸி மற்றும் விளையாட்டு ஆர்வலர்களிடம் மன்னிப்பு கோரினார். உயர்மட்ட விசாரணைக் குழுவையும் அமைத்தார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டு குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று விளையாட்டு அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளார்.

Related News