கோலாலம்பூர், அக்டோபர்.25-
தாய்லாந்தின் முன்னாள் அரசியார் சிரிகிட் மறைவுக்கு வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து அரசாங்கத்திற்கும், மக்களுக்கும், எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இன்று சனிக்கிழமை நடைபெற்று வரும் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் தொடக்க உரையில் முகமட் ஹசான் குறிப்பிட்டார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9.21 மணியளவில், கிங் சுலாலொங்கோர்ன் நினைவு மருத்துவமனையில் தனது 93 வயதில் அரசி சிரிகிட் காலமானார்.
பல்வேறு சமூக நலன் மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பின் பங்களிப்புகளுக்காக மதிக்கப்பட்ட அரசி சிரிகிட் நடப்பு மன்னர் வஜிராலொங்கோர்னின் தாயாவார்.
தாய்லாந்தின் நவீன வரலாற்றிலும் அவர் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








