Sep 27, 2026
Thisaigal NewsYouTube
பாங்காக்கில் கடும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு தூதரகம் உதவி
உலகச் செய்திகள்

பாங்காக்கில் கடும் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு தூதரகம் உதவி

Share:

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தால் மலேசியர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை அங்குள்ள மலேசியத் தூதரகம் வழங்கி வருவதாக மலேசிய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

பாங்காக்கின் பல மாவட்டங்கள் மற்றும் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நிலைமையை மலேசியத் தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், வெளியுறவு அமைச்சு, உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி, தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றது.

இதனிடையே பாங்காகில் வசித்தும் வரும் மலேசியர்களும், அங்கு சென்றுள்ள மலேசியர்களும் எச்சரிக்கையுடன் இருக்கவும், விழிப்புடன் செயல்படவும், உள்ளூர் அதிகாரிகள் வெளியிடும் அனைத்து பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் கண்டிப்பாகப் பின்பற்றவும் வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Related News