Oct 12, 2026
Thisaigal NewsYouTube

பாகிஸ்தான் நாட்டினரை நாடு கடத்தும் பணி தீவிரம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாகிஸ்தான் நாட்டினரை நாடு கடத்தும் பணி தீவிரம்

புதுடெல்லி, ஏப்ரல்.25-

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டினரை நாடு கடத்துவதற்கு, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தகவல் கூறுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகள் 4 பேரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களைக் கண்டறியும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

அது மட்டுமின்றி, பாகிஸ்தான் மீது பல்வேறு அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டினரை நாடு கடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்.பி., களுடன் அமித்ஷா காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அனைத்து மாநில முதல்வர்களுடனும் அவர் பேசி வருகிறார்.

அந்தந்த மாநிலங்களில் உள்ள பாகிஸ்தான் நாட்டினரை அடையாளம் கண்டு, அவர்களை உடனடியாக பாகிஸ்தானுக்குத் திரும்பி அனுப்புவதை உறுதிச் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமித்ஷா அறிவுறுத்தி உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →