கொலம்பியா, ஜனவரி.29-
கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் அந்நாட்டு எம்.பி உள்பட 15 பேர் உயிரிழந்தனர். கொலம்பியாவின் குகுடாவில் இருந்து புறப்பட்ட விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விமான விபத்தில் எம்.பி டியோஜெனஸ் குயின்டெரோ உள்பட பேரும் உயிரிழந்ததாக அறிவித்துள்ளது.
புறப்பட்ட 12 நிமிடங்களில் சடேனா ஏர்லைன்ஸ் விமானம் HK4709-ன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் 13 பயணிகளும் விமானி உட்பட இருவர் என 15 பேர்கள் பயணித்துள்ளனர். இந்த நிலையில், எவருமே உயிர் தப்பவில்லை என கொலம்பியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. கொலம்பிய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான Diógenes Quintero என்பவரும் இந்த விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர்.
இந்த நிலையில், வெனிசுலா எல்லையில், விமானம் நொறுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விமானத்தின் அவசரகால சமிக்ஞை சாதனம் செயல்படுத்தப்படவில்லை என்றே சடேனா நிறுவனம் பின்னர் தெரிவித்தது.








