Oct 17, 2026
Thisaigal NewsYouTube

சிரியாவில் உள்ள அமெரிக்க தளம் மீது ஏவுகணை தாக்குதல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிரியாவில் உள்ள அமெரிக்க தளம் மீது ஏவுகணை தாக்குதல்

Syria Deir Ezzurz மாகாணத்தில் உள்ள "Al-Omar" எண்ணெய் வயலில் அமைந்துள்ள US இராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

அல்-மயாதீன் செய்திச் சேவை, எதிர்ப்புக் குழுக்கள் பல ஏவுகணைகள் மூலம் உமர் எண்ணெய் வயல்களில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்ததாக தெரிவித்தது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தத் தளத்தின் உள்ளே இருந்து வானத்தில் புகைமூட்டம் எழுந்ததாக அல்-மயாதீன் மேலும் தெரிவித்தது.

ஒமர் எண்ணெய் வயல் தளம் சிரியாவில் அமெரிக்க ஆக்கிரமிப்பின் மிகப்பெரிய இராணுவ தளமாகும். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →