Oct 17, 2025
Thisaigal NewsYouTube
இத்தாலியில் படகு கவிழ்ந்து 20 அகதிகள் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

இத்தாலியில் படகு கவிழ்ந்து 20 அகதிகள் உயிரிழப்பு

Share:

ரோம், ஆகஸ்ட்.14-

இத்தாலியின் லேம்பெடுசா தீவு அருகே ஆப்பிரிக்க அகதிகள் 97 பேரை ஏற்றி வந்த படகு கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகினர். 17 பேரைக் காணவில்லை.

ஐரோப்பிய நாடான இத்தாலியையும், வட ஆப்பிரிக்க நாடுகளையும் மத்தியத் தரைக்கடல் பகுதி இணைக்கிறது. இந்த கடல் பகுதி வழியாக ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க மக்கள் அகதிகளாக இத்தாலிக்குப் பயணிக்கின்றனர்.

இதற்காக ஆபத்தான படகு பயணங்களை மேற்கொள்கின்றனர். இவ்வாண்டில் நேற்று வரை 38,263 பேர் இது போல் இத்தாலி கரையை அடைந்துள்ளனர். மேலும், 675 பேர் படகு கவிழ்ந்த விபத்தில் இறந்து உள்ளனர்.

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 97 பயணியருடன் படகு ஒன்று இத்தாலிக்கு சட்டவிரோதமாகப் புறப்பட்டது.
இது லேம் பெடுசா தீவு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒன்றரை வயது குழந்தை உட்பட 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 17 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடக்கிறது.

Related News