Oct 21, 2025
Thisaigal NewsYouTube
மொத்தமாக முடங்கும் சீனா? திடீரென குழந்தைகளை குறிவைக்கும் நிமோனியா.. அடுத்த பெருந்தொற்றாக மாறுமா
உலகச் செய்திகள்

மொத்தமாக முடங்கும் சீனா? திடீரென குழந்தைகளை குறிவைக்கும் நிமோனியா.. அடுத்த பெருந்தொற்றாக மாறுமா

Share:

பெய்ஜிங்: சீனாவில் இப்போது திடீரென நிமோனியா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இதற்கு என்ன காரணம்.. இது அடுத்த பெருந்தொற்றாக மாறும் அபாயம் இருக்கிறதா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கடந்த 2019இல் பரவ தொடங்கிய கொரோனா உலகெங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. வளர்ந்த நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை எல்லா நாடுகளும் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.

மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகே நாம் கொரோனா பாதிப்பைக் குறைத்துள்ளோம். இதற்கிடையே கொரோனா இப்போதுதான் ஓய்ந்துள்ள நிலையில், சீனாவில் மீண்டும் மற்றொரு பாதிப்பைச் சமாளிக்கப் போராடி வருகிறது.

சீனா: அங்குள்ள பள்ளிகளில் திடீரென மாணவர்களுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. பெய்ஜிங் மற்றும் லியோனிங் மாகாணத்தில் இப்போது இந்த பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. நிமோனியா பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் நிலையில், அங்கே சில பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அந்தளவுக்குப் பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது.

கொரோனா குறித்து முன்கூட்டியே எச்சரித்த சர்வதேச நோய் கண்காணிப்பு தளமான ப்ரோமெட் என்ற அமைப்பும் கூட இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல உலக சுகாதார அமைப்பும், சீனாவில் அதிகரித்துள்ள மூச்சுத்திணறல், குழந்தைகள் மத்தியில் பரவும் நிமோனியா பாதிப்பு ஆகியவை குறித்த விரிவான தகவல்களைக் கோரியுள்ளது. அதேநேரம் கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாமல் வந்த முதல் குளிர் காலம் இது என்பதாலேயே வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

Related News