Oct 30, 2025
Thisaigal NewsYouTube
ராஜஸ்தானில் அரசுப் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து 7 மாணவர்கள் பலி
உலகச் செய்திகள்

ராஜஸ்தானில் அரசுப் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து 7 மாணவர்கள் பலி

Share:

ஜாலாவார், ஜூலை.25-

ராஜஸ்தானில் அரசுப் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர். ஜாலாவார் மாவட்டத்தில் உள்ள பிப்லோடி கிராமத்தில் செயல்பட்டு வந்த அரசுப் பள்ளி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. அச்சம்பவத்தின் போது, சுமார் 60 முதல் 70 மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதில் 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நீண்ட காலமாக பள்ளிக் கட்டடம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டு வந்ததாகவும், அதனைச் சீர் செய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் கிராம மக்கள் குறை கூறியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related News