Oct 28, 2025
Thisaigal NewsYouTube
கைப்பேசி பேச்சு விவகாரம்: 11வது மாடியில் இருந்து குதித்து பெண் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

கைப்பேசி பேச்சு விவகாரம்: 11வது மாடியில் இருந்து குதித்து பெண் உயிரிழப்பு

Share:

தானே, ஏப்ரல்.30-

மஹராராஷ்டிராவில் செல்போனில் அதிக நேரம் பேசிய விவகாரத்தில் 20 வயது பெண் ஒருவர் 11வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார். மஹாராஷ்டிரா மாநிலம் தானேயில் அடுக்குமாடி குடியிருப்பில் 11 வது தளத்தில் சமிக்ஷா நாராயன் என்ற 20 வயது பெண் வசித்து வந்தார். இந்த நிலையில், சமிக்ஷா தான் வசிக்கும் 11வது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்தார்.

சமிக்ஷா என்ற பெண், நேற்று இரவு தனது செல்போனில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததாகவும், அந்த பெண்ணின் மாமா, பேச்சை நிறுத்தச் சொல்லியதோடு, அந்த பெண்ணின் செல்போனை எடுத்துச் சென்று விட்டதாகவும், அதன் பிறகு அவர், 11வது மாடியிலிருந்து குதித்து உயிரிழந்ததாகவும் அவரது மாமா புகாரில் தெரிவித்திருந்தார். கீழே விழுந்த அந்த பெண், பலத்த காயங்களோடு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அந்த பெண் இன்று இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விபத்து மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணங்களைக் கண்டறிய அனைத்து கோணங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக் போலீசர் கூறினர்.

Related News

விமான நிலையத்தில் டிரம்ப் நடனம் ஆடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது

விமான நிலையத்தில் டிரம்ப் நடனம் ஆடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது

மலேசியா ஓர் அற்புதமான நாடு: டொனால்ட் டிரம்ப் பாராட்டு

மலேசியா ஓர் அற்புதமான நாடு: டொனால்ட் டிரம்ப் பாராட்டு

47-வது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு ஜப்பான் புறப்பட்டார் டொனால்ட் டிரம்ப்!

47-வது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு ஜப்பான் புறப்பட்டார் டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: 1,711 மலேசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு - MITI அறிவிப்பு!

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: 1,711 மலேசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு - MITI அறிவிப்பு!

"உலகளாவிய நிலைத்தன்மைக்குத் தூணாக இந்தியா-ஆசியான் கூட்டு": பிரதமர் மோடி பெருமிதம்!

"உலகளாவிய நிலைத்தன்மைக்குத் தூணாக இந்தியா-ஆசியான் கூட்டு": பிரதமர் மோடி பெருமிதம்!

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

கைப்பேசி பேச்சு விவகாரம்: 11வது மாடியில் இருந்து குதித்து... | Thisaigal News