சீனா, 1998 வரை கம்யூனிஸ சித்தாந்தத்தை கடைபிடித்து வந்ததால், உள்நாட்டு வர்த்தகத்திலேயே கவனம் செலுத்தி, உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு வைத்து கொள்ளாமல் இருந்தது.
அதற்கு பிறகு மெல்ல மாற தொடங்கிய சீனாவின் பொருளாதார சித்தாந்தங்களின் காரணமாக, அந்நாடு தாராளமயமாக்கல் கொள்கைகளை கடைபிடிக்க துவங்கியது.
ஒரே கட்சி ஆட்சி முறை உள்ள நாடு என்பதால், சீனா, தன் நாட்டை முன்னேற்றும் திட்டங்களை உடனுக்குடன் எந்த எதிர்ப்பும் இன்றி செயல்படுத்தி, அதி வேகமாக தனது உற்பத்தி திறனை பெருக்கி கொண்டது.
இதன் காரணமாக சீன பொருட்களே உலக சந்தைகள் முழுவதும் குவிய தொடங்கின. இதனால், சீனாவில் பல உலக நாடுகள் முதலீடு செய்வதிலும் ஆர்வம் காட்டி வந்தன.