நியூயார்க்: நியூயார்க்கில் உள்ள ஒரு யூத ஜெப ஆலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சுரங்கம் அங்கிருந்த மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்கே சட்டவிரோதமாக கட்டப்பட்ட சுரங்கப்பாதையை நியூயார்க் நிர்வாகம் சீல் வைப்பதை ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் தடுக்க முயன்றபோது அங்கே பெரிய மோதல் வெடித்தது.
இந்த சுரங்கம் ஏன் கட்டப்பட்டது உள்ளே நடந்தது என்ன என்பது தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன. அதிலும் உள்ளே இருந்து மீட்கப்பட்ட பொருட்கள் பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளன. நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் கிரவுன் ஹைட்ஸில் அமைந்துள்ள சாபாத் லுபாவிட்ச் யூத உலக தலைமையகத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக பத்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் வீடியோக்கள் சமூக ஊடக தளங்களில் வைரலானது. அந்த யூதஜெப ஆலயத்தில் இருந்த ஆண்கள் காவல்துறை அதிகாரிகளுடன் எப்படி மோதினார்கள், அவர்களில் சிலர் பின்னர் கைது செய்யப்பட்டது எப்படி என்பது தொடர்பான காட்சிகள் வைரலாகி வருகின்றன.
என்ன நடந்தது?: வாரம் டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை, கட்டிடத்தின் அடித்தளத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ரகசியமாக இந்த சுரங்க தோண்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சுரங்கப்பாதைகள் ஏன் கட்டப்பட்டன என்பது குறித்து காவல்துறை இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கத்தை வழங்கவில்லை.
அந்த யூத கட்டிடத்தின் பெண்கள் பிரிவு இருக்கும் பகுதிக்கு இந்த சுரங்கம் சென்றுள்ளது. அங்கே பெண்கள் தங்களை கழுவிக்கொள்ளும் பகுதியும் இருந்துள்ளது. உள்ளே இருந்து ரத்த கறை போன்ற கறை படிந்த பெட்கள் கைப்பற்ற சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.