Jan 18, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேச விமான விபத்தில் பலி  எண்ணிக்கை 31 ஆக உயர்வு
உலகச் செய்திகள்

வங்காளதேச விமான விபத்தில் பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு

Share:

டக்கா, ஜூலை.23-

வங்காளதேசத்தின் டாக்காவில் எப் - 7 என்ற விமானப் படையின் பயிற்சி விமானம், நேற்று முன்தினம் புறப்பட்ட சில நிமிடங்களில் பள்ளி கட்டடம் ஒன்றின் மீது விழுந்தது. இதில், சீன தயாரிப்பான அந்த போர் விமானம் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில், பள்ளியில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட, 20 பேர் பலியாயினர். இதைத் தவிர, 170க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் தீக்காயமடைந்த மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. இதில் 25 பேர் மாணவர்கள். பெரும்பாலானோர் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. விபத்து குறித்து மேலும் விசாரிக்க உயர்மட்ட குழுவை விமானப் படை அமைத்துள்ளது.

1984ல் கடும் மழைக்கு இடையே டாக்கா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற பயணியர் விமானம் வெடித்துச் சிதறியது. இதில் 49 பேர் பலியாகினர். அதன் பின் வங்கதேசத்தில் நடந்த மோசமான விபத்தாக, இது கருதப்படுகிறது.

Related News