Dec 26, 2025
Thisaigal NewsYouTube
ஜப்பான் தொழிற்சாலையில் கத்திக் குத்து: 14 பேர் காயம்
உலகச் செய்திகள்

ஜப்பான் தொழிற்சாலையில் கத்திக் குத்து: 14 பேர் காயம்

Share:

தோக்யோ, டிசம்பர்.26-

ஜப்பானின் மத்தியப் பகுதியில் உள்ள மிஷிமா பகுதியில் நிகழ்ந்த கத்திக் குத்துச் சம்பவத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜப்பானின் மத்திய பகுதியில் மிஷிமா என்ற பகுதியில் ரப்பர் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு கத்தியுடன் வந்த ஒருவர், தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களைச் சராமரியாகத் தாக்கத் தொடங்கினார். மேலும் ரசாயனம் ஒன்றையும் வீசியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து கத்திக் குத்து நடத்திய நபர் பிடிபட்டார். காயமடைந்தவர்களின் நிலைமை, தாக்குதல் நடத்திய நபர் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

Related News