Oct 21, 2025
Thisaigal NewsYouTube
அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண்ணை கொலை செய்த கணவன்
உலகச் செய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண்ணை கொலை செய்த கணவன்

Share:

ஆகஸ்ட் 09-

அவுஸ்திரேலியா - மெல்பேர்ன், Sandhurst பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் மகன் நேற்று நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.

ஆத்திரத்தில் தந்தை தாக்கியபோது உதவி கேட்டு அலறியடித்து தாய் ஓடியதாகவும், தந்தை கோடாரியால் துரத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரின் 19 வயது மகன் தினுஷ் குரேரா, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் திகதி தனது வீட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக நேற்று நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

காணொளி மூலம் சாட்சி

தாயின் மரணத்தின் போது 17 வயதுடைய குறித்த இளைஞன் நேற்று 14 நீதிபதிகளிடம் காணொளி மூலம் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபரான தந்தை தாயை கோடரியால் தாக்கி அம்புலன்ஸ் வாகனத்தை அழைக்கும் முயற்சியை தடுத்ததையும் மகன் நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

தப்பிக்க முயன்றால் அனைவரையும் வீட்டில் பெட்ரோல் ஊற்றி கொன்று விடுவதாக தந்தை மிரட்டியதாக இளைஞன் தெரிவித்துள்ளார்.

Related News