Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பாகிஸ்தான் பிரச்னையில் மத்தியஸ்தம் தேவையில்லை; டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி திட்டவட்டம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாகிஸ்தான் பிரச்னையில் மத்தியஸ்தம் தேவையில்லை; டிரம்பிடம் இந்திய பிரதமர் மோடி திட்டவட்டம்

புதுடில்லி, ஜூன்.18-

பாகிஸ்தானுடனான பிரச்னைகளில் அமெரிக்காவின் எந்த ஒரு மத்தியஸ்தத்தையும் இந்தியா ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது என்று அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இந்தியப் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார்.

புதுடில்லியில் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியப் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் தொலைபேசியில் பேசியதைப் பகிர்ந்து கொண்டார். மேலும், இரு தரப்பினரும் பேசிய விவரங்கள் என்ன என்பதையும் அவர் விரிவாக விளக்கினார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மத்தியஸ்தம் குறித்து அமெரிக்காவால் எந்த மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்பதை டிரம்பிடம் மோடி தெளிவாகக் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →