Oct 5, 2026
Thisaigal NewsYouTube

இஸ்ரேல் விமானத்தைத் தாக்க சதியா? ஃபைலைதுபாய் துணை விமானி மீது அதிர்ச்சிக் குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இஸ்ரேல் விமானத்தைத் தாக்க சதியா? ஃபைலைதுபாய் துணை விமானி மீது அதிர்ச்சிக் குற்றச்சாட்டு

இஸ்ரேல் செல்லும் ஃபைலைதுபாய் விமானத்தைத் தாக்கி, பென் குரியோன் விமான நிலையத்தில் மோதச் செய்யத் திட்டமிட்டதாக ஓமனைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி, டெல் அவிவ் நோக்கிச் சென்ற விமானத்தின் விமானி ஸ்மித் மச்சாரை விமான அறைக்குள் அவசரகாலக் கோடரியால் தாக்கியதாகக் கூறப்படும் ஹமாம், தற்போது ஐக்கிய அரபு சிறையில் உள்ளார்.

கடுமையாகக் காயமடைந்த போதிலும் விமானி ஸ்மித் மச்சார், விமான அறைக் கதவைத் திறக்க முடிந்ததால், மற்ற பணியாளர்கள் துணை விமானியைக் கட்டுப்படுத்தினர். பின்னர் பயணிகளாக இருந்த இரு ஓய்வுநிலை ஃபைலைதுபாய் விமானிகள் விமானத்தைக் கட்டுப்படுத்தி, சவுதி அரேபியாவின் தபுக்கில் பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.

விசாரணையில், இஸ்ரேலுக்குச் செல்லும் விமானங்களைத் தேடிய பின்னரே ஃபைலைதுபாயைத் தேர்ந்தெடுத்ததாக ஹமாம் கூறியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவர் தனியாகச் செயல்பட்டாரா, தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்டவை தொடர்ந்து விசாரிக்கப்படுகின்றன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →