கோலாலம்பூர், அக்டோபர்.31-
வெளிநாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ஓசிஐ பதிவு செய்வது இப்போது ஆறாவது தலைமுறை சந்ததியினருக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தூதரகம் இதனை அறிவித்தது.
மலேசிய விண்ணப்பதாரர்களுக்கு இந்திய வம்சாவளியின் நடைமுறைகள் மேலும் திருத்தப்பட்டுள்ளன. இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான மக்களிடையே உறவுகளை வலுப்படுத்துவதற்கும், கல்வி, கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
கடந்த ஜூலை மாதம், பல விண்ணப்பதாரர்கள் தொலைந்து போன அல்லது கிடைக்காத வரலாற்று ஆவணங்கள், பழைய கடப்பிதழ் ஆவணங்கள் காரணமாக வம்சாவளியைச் சான்றளிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டதால், மலேசிய இந்தியர்களுக்கான ஓசிஐ விண்ணப்ப செயல்முறையை எளிமைப்படுத்த இந்தியா செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மலேசிய அரசாங்கத்தால் அல்லது முன்னாள் மலாயா அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஆவணங்களை ஏற்றுக் கொள்ள முடியும் என்பதை எங்கள் அரசாங்கத்தால் ஒப்புக் கொள்ள வைக்க நாங்கள் முயற்சித்தோம்.
இந்தியாவைப் பிறப்பிடமாக அடையாளம் காட்டும் ஆவணம் இருந்தால், நாங்கள் ஓஐசி அட்டையை வழங்க முடியும் என்று மலேசியாவிற்கான இந்தியத் தூதர் பி.என். ரெட்டி அறிவித்துள்ளார்.








