Jan 15, 2026
Thisaigal NewsYouTube
அவ்வளவு பெண்கள் இருக்க.. மேடையில் அழுத வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்! அந்த கோரிக்கை தான் முக்கியமே
உலகச் செய்திகள்

அவ்வளவு பெண்கள் இருக்க.. மேடையில் அழுத வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்! அந்த கோரிக்கை தான் முக்கியமே

Share:

பியாங்யாங்க்: விசித்திரமான சட்டங்களை கொண்டுள்ள வடகொரியாவில் உள்ள பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என அந்த நாட்டின் அதிபர் கிம்ஜாங் உன் மேடையிலேயே கண்கலங்கி அழுதார்.

உலகில் மர்மதேசமாக அழைக்கப்படும் நாடுளில் ஒன்று வடகொரியா. இந்த நாட்டின் அதிபராக கிம்ஜாங் உன் உள்ளார். இந்த நாட்டில் பல்வேறு சட்ட விதிமுறைகள் உள்ளன. அதோடு கிம்ஜாங் உன் சர்வாதிகாரி போல் அந்த நாட்டை ஆட்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதோடு அமெரிக்காவை எதிர்க்க பல நாடுகள் அஞ்சும் நிலையில் கிம்ஜாங் உன் அதற்கு விதிவிலக்காக உள்ளார். அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி அடிக்கடி பல்வேறு ஏவுகணை சோதனைகளை அவர் நிகழ்த்தி வருகிறார்.

பரப்பளவில் வடகொரியா என்பது மிகவும் சிறிய நாடாகும். இந்த நாட்டின் மக்கள்தொகை என்பது 2.61 கோடி மட்டும் தான் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் நாட்டில் உள்ள பெண்கள் அதிகமாக குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் எனக்கூறி மேடையில் கிம்ஜாங் உன் கண்கலங்கி உள்ளார். வடகொரியாவில் தற்போது குழந்தை பிறப்பு விகிதம் சரிந்து வரும் நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அதாவது தலைநகர் பியாக்யாங்கில் நடந்த பெண்களுக்கான நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் பெண்கள் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும். அதுதான் நம் நாட்டை பாதுகாக்கும். பிறப்பு விகிதம் குறைவதை தடுப்பது மட்டுமின்றி குழந்தைகளை பராமரித்து நன்றாக வளர்க்க வேண்டும். முறையாக கல்வி வழங்க வேண்டும். இதனை செய்ய நான் தயாராக இருக்கிறேன்'' என பேசினார்.

Related News