Oct 17, 2025
Thisaigal NewsYouTube
நடுவானில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
உலகச் செய்திகள்

நடுவானில் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

Share:

ஶ்ரீநகர், ஆகஸ்ட்.29-

டில்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு 205 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்களுடன் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர்.

டில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி, 4 குழந்தைகள் மற்றும் 7 பணியாளர்கள் உள்பட 205 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் சென்று கொண்டிருந்தது.

ஸ்ரீநகரை நெருங்கிய நேரத்தில், திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். தொடர்ந்து அவசர அனுமதி பெற்று அந்த விமானம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பீதி அடைந்தனர்.

பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், விமானத்தில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாருக்கும் எந்தவோர் ஆபத்தும் ஏற்படவில்லை. பாதுகாப்பாக உள்ளனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மைய காலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு வருவது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Related News