அமெரிக்கா, மார்ச் 28 -
அமெரிக்காவின் பால்ட்டிமோர் நகரில் பாலத்தின் மீது மோதிய கப்பல் விதிமுறைகளை மீறியதா என்பதை உறுதிப்படுத்த விசாரணைகள் நடத்தப்படும் என்று
சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட கப்பல் ஏன் Francis Scott Key பாலம் மீது மோதியது என்பதை அமெரிக்காவின் கடலோரக் காவற்படை விசாரிக்கிறது.
விசாரணையில் சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையமும் உதவுகிறது.
போக்குவரத்து அமைச்சின் கீழ் செயல்படும் போக்குவரத்துப் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவும் சுயேச்சை விசாரணை நடத்தவுள்ளது.
எதிர்காலத்தில் கடல்சார் விபத்துகளைத் தடுக்கக்கூடிய படிப்பினைகளைக் கண்டறிவதற்கு அந்த விசாரணை உதவியாக இருக்கும்.சம்பவத்துக்காக யாரையும் குறைகூறுவது நோக்கம் அல்ல என்று அது வலியுறுத்தியது.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்படும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அங்கீகாரத்தை வழங்கும் பொறுப்பைச் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை என்று ஆணையம் கூறியது.
கப்பல்கள் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யப் பல்வேறு தரப்பினருடன் இணைந்து சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அது சொன்னது.