Jan 10, 2026
Thisaigal NewsYouTube
துன் மகாதீரின் உடல் நிலை குறித்து துருக்கி அதிபர் மிகுந்த கவலை
உலகச் செய்திகள்

துன் மகாதீரின் உடல் நிலை குறித்து துருக்கி அதிபர் மிகுந்த கவலை

Share:

இஸ்தான்புல், ஜனவரி.09-

தேசிய இருதய சிகிச்சைக் கழகமான ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் உடல்நிலை குறித்து துருக்கி அதிபர் Recep Tayyip Erdogan மிகுந்த கவலை தெரிவித்துள்ளதாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

துருக்கிக்கான தனது மூன்று நாள் அதிகாரத்துவப் பயணத்தின் ஒரு பகுதியாக அதிபர் Recep Tayyip Erdogan -னைச் சந்தித்த போது இது குறித்து விவாதிக்கப்பட்டது என்று டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

துன் மகாதீரின் தற்போதைய நிலை குறித்து அதிபர் Erdogan அக்கறையுடன் விசாரித்தார் என்றும், மருத்துவர்கள் வழங்கிய அண்மைய தகவல்களின் அடிப்படையில், துன் மகாதீரின் உடல்நிலை குறித்து அதிபருக்கு தாம் விளக்கம் அளித்ததாகவும் டத்தோ ஶ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

துன் மகாதீர் விரைவில் பூரண நலம் பெறத் தனது வாழ்த்துகளையும் பிரார்த்தனைகளையும் அதிபர் Erdogan தெரிவித்துக் கொண்டார். அத்துடன் துன் மகாதீரின் உடல்நிலை சீரடைந்த பிறகு, அவரைத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்க விரும்புவதாகவும் அதிபர் Erdogan குறிப்பிட்டுள்ளார் என்று இஸ்தான்புல்லில் நேற்று மலேசிய செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

Related News