Oct 30, 2025
Thisaigal NewsYouTube
கொரோனா பீடித்தவர்களின் எண்ணிக்கை  7000த்தை நெருங்குகிறது
உலகச் செய்திகள்

கொரோனா பீடித்தவர்களின் எண்ணிக்கை 7000த்தை நெருங்குகிறது

Share:

புதுடெல்லி, ஜூன்.11-

இந்தியாவில் கொரோனா பீடித்தவர்களின் எண்ணிக்கை 7000த்தை நெருங்குகிறது. ஒரே நாளில் 324 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். நாடு முழுவதும் மீண்டும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. குறிப்பாக டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் தினமும் பதிவாகும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 6815 ஆக உள்ளது. வெகு விரைவில் இது 7000த்தை எட்டிவிடும் எனத் தெரிகிறது. 324 பேர் புதிதாக கொரோனா பீடித்தவர்களாக அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

டில்லி, கேரளா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு பதிவாகி இருக்கிறது. நாட்டில் அதிகபட்சமாக கேரளாவில் தான் அதிகமோர் கொரோனாவுக்கு ஆளாகி உள்ளனர். அங்கு 2053 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 96 புதிய சம்பவமாகும். கொரோனா பரவலைத் தடுக்க மற்றும் அதில் இருந்து தற்காத்துக் கொள்ள பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது நலம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related News