Oct 23, 2026
Thisaigal NewsYouTube

வீட்டுக்கு ஒரு விமானம்.. வீதி முழுதும் பார்க்கிங் செய்யும் கிராம மக்கள்.. ஏன் வைத்திருக்கிறார்கள்?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வீட்டுக்கு ஒரு விமானம்.. வீதி முழுதும் பார்க்கிங் செய்யும் கிராம மக்கள்.. ஏன் வைத்திருக்கிறார்கள்?

கலிபோர்னியா: அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள கேமரான் ஏர்பார்க் கிராமத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகிறார்களாம்.

அந்த காலத்தில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல கால்நடைகளாகவும் மாட்டு வண்டிகளிலும் சென்று வந்தனர். நாளடைவில் பொது போக்குவரத்து, சைக்கிள், ஆட்டோ ரிக்ஷா, கார் என போக்குவரத்து வாகனங்கள் அதிகரித்து வருகின்றன.

ஒவ்வொரு வீட்டிலும் சைக்கிள் இருந்த காலம் போய் டூவிலர்கள் வந்தன. தற்போது அவையும் போய் வீட்டுக்கு குறைந்தபட்சம் ஒரு காராவது இருக்கிறது. பக்கத்து கடைக்கு போக வேண்டுமானால் கூட காரில்தான் பயணிக்கிறார்கள்

காற்று மாசு, போக்குவரத்து பாதிப்பு என இருந்தாலும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரே இடத்திற்கு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கார்களில் வருகிறார்கள். சரி விஷயத்திற்கு வருவோம். அமெரிக்காவில் ஒரு கிராமத்தில் வீட்டிற்கு ஒரு விமானம் இருக்கிறதாமே தெரியுமா? நிச்சயமாகத்தான் சொல்கிறோம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →