Nov 12, 2025
Thisaigal NewsYouTube
அமெரிக்காவில் 1,200 விமானங்கள் ரத்து
உலகச் செய்திகள்

அமெரிக்காவில் 1,200 விமானங்கள் ரத்து

Share:

வாஷிங்டன், நவம்பர்.09-

அமெரிக்க அரசின் நிதி முடக்கத்தின் காரணமாக, எப்.ஏ.ஏ., எனும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் உத்தரவின்படி, 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்காத காரணத்தால், அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்க முடியாமல், அன்றாட பணிகள் ஸ்தம்பித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க விமான போக்குவரத்தும் இடையூறுகளைச் சந்தித்து வருகிறது.

பாதுகாப்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட விமான போக்குவரத்துத்துறை ஊழியர்களில் பெரும் பகுதியினர் சம்பளமில்லாத விடுமுறையில் அனுப்பப்பட்டனர்.

குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள், சம்பளமில்லாமல் தொடர்ந்து வேலைக்கு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவர்களில் பலர் உடல் நிலையைக் காரணம் காட்டி விடுப்பு எடுத்துள்ளனர்.

இதையடுத்து, போதிய பணியாளர்கள் இல்லாததால், விமான போக்குவரத்தை ஆணையத்தால் பாதுகாப்பாக கையாள முடியவில்லை.

அதனால் ஆணையம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, விமான நிறுவனங்கள் தங்களின் விமான இயக்கத்தை குறைத்ததையடுத்து, 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Related News