Jul 15, 2026
Thisaigal NewsYouTube
ஜமைக்காவை சூறையாடிய மெலிசா சூறாவளி: 6 லட்சம் மக்கள் வெளியேற்றம்
உலகச் செய்திகள்

ஜமைக்காவை சூறையாடிய மெலிசா சூறாவளி: 6 லட்சம் மக்கள் வெளியேற்றம்

Share:

கிங்ஸ்டன், அக்டோபர்.29-

ஜமைக்காவை சூறையாடிய சூறாவளி மெலிசா, தற்போது கியூபாவை நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இந்த சூறாவளியால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஜமைக்காவை பேரிடர் பகுதியாக அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

கரிபீயன் தீவுகளில் உள்ள ஜமைக்காவை இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் சூறாவளி என்றும், 174 ஆண்டுகளில் இல்லாத தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வர்ணிக்கப்பட்ட மெலிசா சூறாவளி கடுமையாகத் தாக்கியுள்ளது. வலுப்பெற்ற மெலிசா மணிக்கு 300 கிமீ வேகத்தில் ஜமைக்கா மற்றும் அதனை சுற்றியுள்ளத் தீவுகளைத் தாக்கி, பெரும் மழையையும், நிலச்சரிவையும் ஏற்படுத்தி உள்ளது.

மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஜமைக்காவின் சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இருப்பினும், இந்த சூறாவளிக்கு மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஜமைக்காவில் 3 பேரும், ஹைதியில் 7 பேரும் பலியாகி உள்ளனர்.

ஜமைக்கா முழுவதும் இடைவிடாத கனமழை, சூறாவளியால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரமே இல்லை. தகவல் தொடர்புகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

Related News

சான் பிரான்சிஸ்கோ அல்காட்ராஸ் தீவு அருகே 20 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 3 பேர் மாயம்!

சான் பிரான்சிஸ்கோ அல்காட்ராஸ் தீவு அருகே 20 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, 3 பேர் மாயம்!

வியட்நாமில் 11 மில்லியன் டாலர் வைரக் கடத்தல் கும்பல் அம்பலம்: நாட்டின் மிகப்பெரிய நகை நிறுவனம் சிக்கியதால் பரபரப்பு

வியட்நாமில் 11 மில்லியன் டாலர் வைரக் கடத்தல் கும்பல் அம்பலம்: நாட்டின் மிகப்பெரிய நகை நிறுவனம் சிக்கியதால் பரபரப்பு

சமையலறைக்குள் புகுந்து குளிர்சாதனப் பெட்டியைத் திறந்த கரடி: ஜப்பானில் பரபரப்பு!

சமையலறைக்குள் புகுந்து குளிர்சாதனப் பெட்டியைத் திறந்த கரடி: ஜப்பானில் பரபரப்பு!

துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடர்ந்து வாகனங்களை மறித்துக் கைது செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியது ICE

துப்பாக்கிச் சூடு சம்பவங்களைத் தொடர்ந்து வாகனங்களை மறித்துக் கைது செய்யும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தியது ICE

ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் மின் நிலையங்கள், பாலங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் மின் நிலையங்கள், பாலங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும்: டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!

தேர்தல் நேர்மையை உறுதி செய்ய சமூக ஊடக விதிகளக் கடுமையாக்கியது ஜப்பான்

தேர்தல் நேர்மையை உறுதி செய்ய சமூக ஊடக விதிகளக் கடுமையாக்கியது ஜப்பான்