பீஜிங்: சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். நிலநடுக்க பாதிப்புகளால் 8 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் சக்தி வாய்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 11.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. சீனாவின் கன்சு மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்ட்டது. நிலநடுக்கத்தின் தீவிரம் அதிகமாக இருந்ததால் பல க்ட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதனால், அச்சத்தில் உறைந்த மக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக ஓடி வந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
வீடுகளில் இருந்து மேற்பகுதி இடிந்து விழும் காட்சிகளும் வீட்டில் உள்ள பொருட்கள் குலுங்கும் காட்சிகள் அடங்கிய வீடியொ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர். கன்சு மாகாணத்தின் சில பகுதிகள் மட்டும் இன்றி அருகில் உள்ள கிங்காய் மாகாணத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.