Jun 13, 2026
Thisaigal NewsYouTube
ஜெர்மனியில் கூட்டத்தில் கார் புகுந்ததில் குழந்தைகள் உட்பட 15 பேர் காயம்
உலகச் செய்திகள்

ஜெர்மனியில் கூட்டத்தில் கார் புகுந்ததில் குழந்தைகள் உட்பட 15 பேர் காயம்

Share:

பெர்லின், செப்டம்பர்.04-

பெர்லினில் மக்கள் கூட்டத்தில் கார் புகுந்த சம்பவத்தில், 15 குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர்.

ஜெர்மனியின் பெர்லினில் சாலை ஓரத்தில் மக்கள் நடந்து சென்ற கூட்டத்திற்குள் அந்தக் கார் அதிவேகமாகப் புகுந்தது. கார் மோதியதில் 15 குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்துக்கு காரணமான காரின் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். காயமடைந்த 15 குழந்தைகளில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கு காரணம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Related News

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!