Oct 17, 2025
Thisaigal NewsYouTube
பாகிஸ்தான் வெள்ளம்: பலி எண்ணிக்கை 300ரைத் தாண்டியது
உலகச் செய்திகள்

பாகிஸ்தான் வெள்ளம்: பலி எண்ணிக்கை 300ரைத் தாண்டியது

Share:

பெஷாவர், ஆகஸ்ட்.17-

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ரைத் தாண்டியது.

பாகிஸ்தானில் ஜூன் மாத இறுதியில் பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துங்க்வா மழையால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது.

தொடர் கனமழையால் கடும் வெள்ளப் பெருக்கு, ஆங்காங்கே நிலச்சரிவுகள் என அவ்விடம் உருக்குலைந்துள்ளது. திடீர் வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் சிக்கிக் கொண்டனர். மேலும் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகளும் புதைந்தன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி கைபர் பக்துங்க்வாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 300ரைத் தாண்டியுள்ளது.

மேலும் பலரைக் காணவில்லை. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News