Jun 14, 2026
Thisaigal NewsYouTube
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா கவலைக்கிடம்
உலகச் செய்திகள்

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா கவலைக்கிடம்

Share:

டக்கா, நவம்பர்.29-

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்காளதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, 80, இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக, டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சிறப்பு டாக்டர்கள் குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கிறது.

அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நீரழிவு, கல்லீரல், சிறுநீரக பிரச்னைகள், இதய கோளாறு போன்ற உடல்நலப் பிரச்னைகளால் அவர் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்தாண்டு வங்காளதேசத்தில் மாணவர் போராட்டம் ஏற்பட்டு ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பின், அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், கலிதா ஜியாவின் உடல்நலப் பாதிப்பு அக்கட்சிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 1991 - 96 மற்றும் 2001 -  06 என இரு முறை வங்காளதேசப் பிரதமராக இருந்த கலிதா ஜியா, ஊழல் வழக்குகளில் சிக்கி, 17 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றவர். கடந்தாண்டு ஆகஸ்டில் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

Related News

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் விளையாட்டில் விபரீதம்: கயிறு கட்ட மறந்ததால் 23 வயது பெண் பலி

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் விளையாட்டில் விபரீதம்: கயிறு கட்ட மறந்ததால் 23 வயது பெண் பலி

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

கென்னடி கலை மைய கட்டிட முகப்பிலிருந்து டொனால்ட் டிரம்ப் பெயர் அதிரடியாக அகற்றம்

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல்: பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் நால்வருக்குச் சிறை

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

சீனாவில் உளவு குற்றச்சாட்டு: அமெரிக்க ஆய்வாளர் மின் ஜின் தடுப்புக் காவலில் வைப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீர் ராஜினாமா: பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராணுவ நிதித் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!