Jan 17, 2026
Thisaigal NewsYouTube
உலகச் செய்திகள்

மக்கள் மீது குண்டுகளை வீசிய தென்கொரிய போர் விமானம்

Share:

சியோல், மார்ச்.06-

தென் கொரியாவில் குடியிருப்புகள் மீது, போர் விமானம் 8 குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அது தவறுதலாக நடந்த ஒன்று என்றும் அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் கொரிய ராணுவம் கூறியது. போர் விமானம் 8 குண்டுகளை வீசியதால் குண்டுகள் தாக்கி, பொதுமக்கள் 15 பேர் காயம் அடைந்தனர். போச்சியோனில் வீடுகள் மற்றும் ஒரு தேவாலயம் சேதமடைந்தன. இந்த தாக்குதல் நடந்த பகுதி, தலைநகர் சியோலில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இது குறித்து விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த விபத்தால் ஏற்பட்ட சேதத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறோம் என விமானப்படை அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

போர் பயிற்சியின் போது தவறுதலாக குண்டுகள் வீசப்பட்டதாக தென் கொரிய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. குண்டு வீச்சு சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியதோடு அப்பகுதியில் போர் பயிற்சி முழுவதும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

Related News