அமெரிக்கா, மார்ச் 4 -
அமெரிக்காவில் ஒஹாயோ மாநிலத்தின் கிலிவ்லந்து நகரில் உள்ள நெடுஞ்சாலையில் வித்தியாசமான காட்சி...கார்கள் வரிசை வரிசையாகச் செல்ல...2 குதிரைகள் கார்களுக்குக் குறுக்கே குறுக்கே ஓடுகின்றன...
காட்சிகளைக் காட்டும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டது.காவல்துறையினர் குதிரைகளைப் பின்தொடர்ந்து சென்றனர்.
அமெரிக்காவின் ஆக நீண்ட நெடுஞ்சாலையான Interstate 90இல் ஓடிய குதிரைகள் காவல்துறையினருக்குச் சொந்தமானவை என்று பின்னர் தெரியவந்தது.குதிரை வளாகத்திலிருந்து அவை திப்பித்ததாக அதிகாரிகள் கூறினர்.
அவர்கள் பின்னர் குதிரைகளைப் பிடித்துவிட்டனர்.கிலிவ்லந்து நகரின் காவல்துறையினர் 8 குதிரைகளை வைத்துள்ளனர்.சமூகத்தினருடன் பழகவும் நிகழ்வுகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன.