சிங்கப்பூர், ஜூலை.27-
நேற்று சிங்கப்பூரின் தஞ்சோங் காத்தோங் சாலையில் ஒரு பகுதி உள்வாங்கி, இராட்சத பள்ளம் ஏற்பட்டது. அதில் கார் ஒன்று விழுந்த சம்பவத்தில், தமிழகத்தைச் சேர்ந்த கட்டுமானப் பணி கண்காணிப்பாளர் பிச்சை உடையப்பன் சுப்பையாவும் அவரது சகாக்களும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ஒரு பெண்ணை மீட்டனர்.
சனிக்கிழமை மாலை திடீரென ஏற்பட்ட பெரும் சத்தத்தில் பள்ளத்தில் கார் மூழ்கியதைப் பார்த்ததும், சுப்பையா தனது சக தொழிலாளர்களுடன் கயிற்றை வீசி, சில நிமிடங்களிலேயே அப்பெண்ணைப் பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட அப்பெண் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
"ஓர் உயிரைக் காப்பாற்றினோம்… எது நடந்தாலும் அதுதான் முக்கியம்!" என தமிழில் உருக்கமாகத் தெரிவித்த சுப்பையாவின் இந்த வீரச்செயல் அனைவராலும் பாராட்டப்படுகிறது.








