Oct 20, 2025
Thisaigal NewsYouTube
சத்தமின்றி நடக்கும் பேரழிவு.. பாகிஸ்தானை அமைதியாக காலி செய்யும் "எபிடெமிக்".. என்ன நடக்கிறது?
உலகச் செய்திகள்

சத்தமின்றி நடக்கும் பேரழிவு.. பாகிஸ்தானை அமைதியாக காலி செய்யும் "எபிடெமிக்".. என்ன நடக்கிறது?

Share:

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சத்தமின்றி ஒரு "எபிடெமிக்" பரவிக்கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் முழுக்க பரவும் பெருந்தொற்று என்று வர்ணிக்கும் விதமாக அங்கே சர்க்கரை வியாதி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உலகிலேயே அதிக நீரழிவு நோய் - சர்க்கரை வியாதி இருக்கும் நாடாக பாகிஸ்தான் மாறி உள்ளது.

ஒரு காலத்தில் பணக்காரர்களின் நோயாகக் கருதப்பட்ட நீரிழிவு நோய், இப்போது பரவலாக பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக பாகிஸ்தானில் அது ஒரு காய்ச்சல் போல.. இயல்பான நோயாகவே மாறிவிட்டது.

பாகிஸ்தானில் நீரிழிவு நோய் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறி வருகிறது. கடந்த சில வருடங்களாக பாகிஸ்தானியர்கள் நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது ஏன் நிகழ்கிறது மற்றும் பாகிஸ்தானில் என்ன நடக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

பாகிஸ்தானில் அதிகம்: உலகிலேயே இப்போது பாகிஸ்தானில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம். பாகிஸ்தான் மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2023 ஆம் ஆண்டில், பாகிஸ்தானில் சுமார் 20.4 மில்லியன் மக்களுக்கு நீரிழிவு நோய் இருந்தது. இந்த நிலைமை மாறவில்லை என்றால், 2045 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 31.4 மில்லியனாக உயரக்கூடும். மோசமான விஷயம் என்னவென்றால், பலர் தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதை கூட தெரியாமல் உள்ளனர்.

இது ஏன் நடக்கிறது: பாகிஸ்தானில் அதிகமான மக்கள் நீரிழிவு நோயைப் பெறுவதற்கு சில காரணங்கள் உள்ளன:

  1. ஒரே இடத்தில் இருப்பது: பாகிஸ்தானில் பலர் அதிகம் நடமாடுவதில்லை. நடப்பது, ஓடுவது, உடற்பயிற்சி செய்வது இல்லை. அவர்கள் உட்கார்ந்து அதிக நேரம் செலவிடுகிறார்கள். சுறுசுறுப்பாக பைகளை அதிக நேரம் செய்வது இல்லை. இதனால் அவர்களுக்கு அதிக எடை மற்றும் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

2. ஆரோக்கியமற்ற உணவை உண்பது: முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை பாகிஸ்தானியார்கள் உண்பது இல்லை. இப்போது அவர்கள் அதிக நொறுக்குத் தீனிகளை சாப்பிடுகிறார்கள். இந்த வகையான உணவுகளில் சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு நிறைந்துள்ளது, இது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.

3. குடும்ப வரலாறு: குடும்ப வரலாறு காரணமாக பலருக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இது, பாகிஸ்தானில் நெருங்கிய உறவினர்களுக்கு இடையே நிறைய திருமணங்கள் நடப்பது அங்கே நீரிழிவு அதிகரிக்க இன்னொரு முக்கிய காரணம்.

4. சுகாதாரப் பாதுகாப்பு: பாகிஸ்தானில் உள்ள பலருக்கு மருத்துவர்கள் அல்லது மருத்துவமனைகளை எளிதாக அணுக முடியாது. அங்கே போதிய மருத்துவ வசதி இல்லை என்பது முக்கியமான காரணம். குறிப்பாக கிராமப்புறங்களில் இது அதிகம். இதனால் பலராலும் நீரிழிவு இருப்பதைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போகிறது.

அதிகம்; உலகிலேயே இப்போது பாகிஸ்தானில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம். பாகிஸ்தான் மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் இது 120 கோடி மக்கள் தொகை இருந்தும் கூட வெறும் 10% பேர்தான் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாகிஸ்தானில் வரும் வருடங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Related News