மனிதவடிவ ரோபோக்கள் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதைத் தொடர்ந்து, இது சீன நிறுவனங்களை ஒடுக்கும் செயல் என சீனா கடுமையாகக் கண்டித்துள்ளது. தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் நடமாடும் ரோபோக்களுக்கு அமெரிக்காவின் பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் தடை விதித்துள்ளது.
தேசிய பாதுகாப்புக் கருத்தை தவறாகப் பயன்படுத்தி சீன நிறுவனங்களை அமெரிக்கா முடக்க முயல்வதாகச் சீனா தெரிவித்துள்ளது. மேலும், இத்தகைய பாதுகாப்புவாத நடவடிக்கைகள் அமெரிக்காவின் சொந்தப் போட்டித்திறனை மேம்படுத்தாது என்றும், மாறாக அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் நுகர்வோரின் நலன்களையே பாதிக்கும் என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.








