Oct 17, 2025
Thisaigal NewsYouTube
அமெரிக்க முத்திரைகளைப் புறக்கணிக்கும் இந்திய மக்கள்
உலகச் செய்திகள்

அமெரிக்க முத்திரைகளைப் புறக்கணிக்கும் இந்திய மக்கள்

Share:

புதுடெல்லி, ஆகஸ்ட்.13-

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்த அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்க முத்திரைகளுக்கு எதிரான புறக்கணிப்பு அலை இந்தியாவில் தொடர்ந்து உச்சத்தில் இருக்கிறது.

இந்தியப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட மிகப் பெரிய அடியாக விவரிக்கப்படும் இந்த நடவடிக்கை, நாட்டின் கண்ணியத்தைப் பாதுகாக்க விரும்பிய மக்களின் எழுச்சியைத் தூண்டியது. இதனால் அமெரிக்காவின் தயாரிப்புகளைப் புறக்கணிக்க ஒரு பெரிய பிரச்சாரத்தைத் தொடங்கியது.

இந்தப் புறக்கணிப்பு அழைப்புக்கு பிரபல வணிகர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு நெருக்கமான குழுக்கள் உட்பட பல்வேறு கட்சிகளிடமிருந்து ஆதரவு கிடைத்துள்ளது.

குறி வைக்கப்பட்ட முக்கிய முத்திரைகளான கோகோ கோலா, மெக்டொனால்ட்ஸ், அமேசான் மற்றும் ஆப்பிள் ஆகியவை அடங்கும். அவை உலகச்சந்தையில் அமெரிக்க ஆதிக்கத்தின் அடையாளங்களாக மாறியுள்ளன.

இந்நிலையில் இந்தியர்களுக்கு, வெளிநாட்டுப் பொருட்களைச் சார்ந்திருப்பதிலிருந்து விடுபட்டு, உள்ளூர்ப் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க இதுவே சிறந்த நேரம் எனக் கூறப்படுகிறது.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிக முக்கியமானச் சந்தைகளில் ஒன்றாக இருக்கிறது.

உதாரணமாக, டோமினோஸ் வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில் அதிக கிளைகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் மெட்டாவின் வாட்ஸ்அப் செயலி இந்தியாவில் அதிக பயனர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Related News

அமெரிக்க முத்திரைகளைப் புறக்கணிக்கும் இந்திய மக்கள் | Thisaigal News