பெய்ஜிங், ஆகஸ்ட்.08-
சீனாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 33 பேர் மாயமாகி உள்ளனர்.
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள கன்சு மாகாணத்தின் யுஜோங் கவுண்டி பகுதியில் மழை கொட்டி வருகிறது. இதனால், மலையடிவாரத்தில் அமைந்துள்ள லன்ஜாவு நகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 33 பேர் மாயமாகினர்.
இதன் காரணமாக அங்கு, மின்சாரம் மற்றும் கைப்பேசிச் சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் கிராமங்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார்.