Oct 20, 2025
Thisaigal NewsYouTube
ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு ஆப்பு!
உலகச் செய்திகள்

ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு ஆப்பு!

Share:

லண்டன், ஏப்ரல் 02 -

பிரிட்டன் நாட்டில் விரைவில் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கே ரிஷி சுனக் மிக மோசமான தோல்வியை அடைய வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். பிரிட்டன் நாட்டில் இப்போது பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இருக்கிறார். இக்கட்டான சூழலில் கடந்த 2022இல் அவர் பிரதமர் பதவிக்கு வந்தார்.

இதற்கிடையே பிரிட்டன் நாடு முழுக்க நடத்தப்பட்ட புதிய சர்வே முடிவுகள் அங்கே ஆளும் தரப்பை ஆட்டம் காண வைப்பதாக இருக்கிறது.

இந்தாண்டு இறுதியில் அங்கே நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி படுதோல்வி அடையும் என்றே அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது. இதில் ஆளும் தரப்புக்கு மற்றொரு அதிர்ச்சி தரும் செய்தி என்னவென்றால் பிரதமராக இருக்கும் ரிஷி சுனக் கூட அவரது வடக்கு யார்க்ஷயரின் தொகுதியில் வெல்வது கஷ்டமாம்.

இந்த சர்வேபடி எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் தொழிலாளர் கட்சிக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறது. தொழிலாளர் கட்சி 45 சதவிகித வாக்குகளைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 26 சதவிகித வாக்குகளை மட்டுமே பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது கன்சர்வேடிவ்களை விட 19 சதவிகித அதிக வாக்குகளைத் தொழிற்கட்சி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டை பொறுத்தவரை அங்கே மொத்தம் 650 சீட்கள் உள்ளன. அங்கே ஒரு கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க 326 இடங்களில் வெல்ல வேண்டும். அப்படி இருக்கும் நிலையில், எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் தொழிலாளர் கட்சி 468 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருக்கிறதாம். அதேநேரம் ரிஷி சுனக் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளப் போகும் கன்சர்வேடிவ் கட்சி வரலாறு காணாத படுதோல்வியைச் சந்திக்க இருக்கிறது. அவர்கள் 100க்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த கருத்துக் கணிப்பில், "இப்போது தேர்தல் நடத்தப்பட்டால், சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி நாடு முழுவதும் மிக மோசமான தோல்வியை அடையும். அதேநேரம் தொழிலாளர் கட்சி 468 இடங்களைப் பெற்று வெற்றி பெறும் ஒரு பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி இதுவரை இப்படியொரு தோல்வியைச் சந்தித்ததே இல்லை. ஆனால், கன்சர்வேடிவ் கட்சியின் மோசமான நிலை அத்துடன் நிற்கவில்லை.

மேலும், அடுத்த முறை நிச்சயம் ரிஷி சுனக்கிற்கு வாய்ப்பே இருக்காது என்பதே வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாகவே கூட நம்பிக்கை இல்லாத தீர்மானத்தைக் கொண்டு வந்து அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கவும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

Related News