Oct 10, 2026
Thisaigal NewsYouTube

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் குலுங்கிய கட்டடங்கள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் குலுங்கிய கட்டடங்கள்

சாண்டியாகோ, ஜூன்.07-

சிலி நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 6.6 ஆகப் பதிவாகியிருந்தது. சிலி மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் அண்மையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. இதில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதமாகின. அந்த நிலநடுக்கம் 7.4 ஆக பதிவானது. உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் மீட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 6.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது. அடகாமா பாலைவனப் பகுதி அருகே இந்த நிலநடுக்கம் பதிவானது.

நிலநடுக்கம் காரணமாக சிறிய அளவிலான கட்டடங்கள் குலுங்கின. சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பீதி அடைந்த மக்கள் சாலைகளில் ஓடி தஞ்சம் அடைந்தனர். பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்புகள்,சேதங்கள் ஏற்பட்டதா என்ற உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →