ஆஸ்திரேலியாவில் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கிய நிலையில், அது சந்திரயான் 3 ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது இந்தியாவின் விண்வெளி துறைக்கு மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.
இந்த சந்திரயான் 3 அடுத்த சுமார் 40 நாட்கள் விண்வெளியில் பயணித்து நிலவை அடைய உள்ளது. இதன் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் இறங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.