Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஆஸ்திரியப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 8 பேர் பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆஸ்திரியப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 8 பேர் பலி

கிராஸ், ஜூன்.10-

ஆஸ்திரியாவின் கிராஸ் (Graz) நகரிலுள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் 8 பேர் மாண்டதாக உறுதிச் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் பலர் காயமுற்றதாகக் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் தன்னையே சுட்டுக் கொண்டு மாண்டதாக ஆஸ்திரிய ஊடகம் Kronen Zeitung தகவல் வெளியிட்டிருக்கிறது.

இச்சம்பவம் இன்று காலை 10 மணிக்கு நிகழ்ந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து மாணவர்களும், ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மூன்று லட்சம் பேர் வசிக்கும் கிராஸ் நகரம், ஆஸ்திரியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in உலகச் செய்திகள் →